Sunday, January 20, 2019

வெளி



அன்புள்ள ஜெ

வெண்முரசின் போர்க்களக்காட்சிகள் இப்போது மேலும் மேலும் கவித்துவமானவையாக ஓர் காட்சியிலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு இழுத்துச்செல்லுபவையாக உள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு இரு படைகளுக்கும் நடுவே குருசேத்திரம் எப்படி இருந்தது என்பதைச் சொல்லும் வரிகளை கவிதையாகவே வாசித்தேன். என்னஒரு தீவிரம். வெளிப்படாத வஞ்சங்களின் வெளி என்ற வரி. எனக்கென்னவோ எல்லா மனிதர்களுக்கும் நடுவே அப்படி ஒரு வெளி இருக்கிறது என்ற எண்ணம் வந்தது


மகேஷ்