Friday, January 11, 2019

நாகபாசன்




ஜெ

ஒரு மகத்தான கதைத்தலைவனின் அரங்கநுழைவுபோல் இருக்கிறது கர்ணனின் வருகை. அவனுடைய வில் உருவான விதம். அவனுடைய தேர் உருவான விதம். தேர் மண்ணில் அவன் அகந்தையால் உருவாகிறது. வில் ஆழத்தில் இருக்கும் நாகர்களால் உருவாக்கப்படுகிறது.

அதோடு ஒரு அற்புதமான dualty யும் உருவாகி வந்துவிட்டது. அர்ஜுனன் தேவர்களின் மைந்தன். வானுடன் தொடர்புள்ளவன். கர்ணன் நாகபாசன். ஆகவே பாதாளத்தால் ஆதரிக்கப்படுபவன். இனி நடக்கும்போர் விண்ணுக்கும் பாதாளத்துக்குமான போர்

பாதாள நாகங்கள் கிளர்ந்தெழுந்து கர்ணனை ஆதரித்துக் கொந்தளிக்கும் இடம் ஒரு பெரிய epical dimension னுடன் இருந்தது.. இத்தகைய இடங்கள்தான் வெண்முரசில் பிரதானமாக நினைவில் நிற்கின்றன. வாசிக்கும்போது சிலசமயம் கதையோட்டம் குறைவதுபோல இருந்தாலும் இவைதான் parallel myth ஆக மாறி நம்மைச்சூழ்கின்றன

ராம்