Friday, January 25, 2019

சொற்கள்



ஜெ

வெண்முரசில் போர்க்காட்சிகளை வாசித்துக்கொண்டிருக்கையில் நினைவுக்கு வரும் காட்சி சகுனியுடன் இளைய யாதவர் சூதாடுவதுதான். அதை எடுத்து வாசித்தபோது இப்போதுதான் உண்மையிலேயே அர்த்தம் வருகிறது. அது முழுக்க முழுக்க மகாபாரதப்போரேதான்

அதோடு இந்த வரியும் உடன் இணைந்துகொண்டது. வண்ணக்கடலில் உள்ள வரி இது

சொற்களைக் கொண்டு சூதாடுபவன் நல்லூழ் கொண்டவன். அவன் ஆட்டக்காய்கள் முடிவடைவதில்லை. அவனை அவை வெல்ல விடுவதுமில்லை. முடிவிலா ஆட்டத்தில் அவன் தன்னை ஒப்பளிக்கமுடியும்.

சொற்களைக்கொண்டு சூதாடியவன் வியாசன் அவன் தான் கடைசியில் மிஞ்சினான் என தோன்றுகிறது

ரகுநாத்