Friday, April 21, 2017

பெருக்கு



அன்பு ஜெமோ சார்,
        
அலைகடலென என்பதைத் தாண்டி

    'அலையும் பெருக்கும் கரையும் தங்கள் உடல்களே'                

  ' தன் முன் அலையடித்த முகங்களின் கொந்தளிப்பை  '                   

   புயலில் சருகென ஆக்கும் வாழ்த்தொலிப் பெருக்கு, 

அவ்வொலியே அள்ளிச் சுழற்றி கொண்டு செல்லல்         

   கண்ணுக்குத் தெரியும்    காட்சியாக மட்டுமல்ல காதில் கேட்கும் ஒலியாலும் யயாதி தேவயானி மணநிகழ்வின்  பிரமாண்டத்தில் துளியாய் துமியாய் கலந்தாடும் உணர்வு.
      
              அரசுசூழ்தலில் தேவயானியின் முதலடி என்பது தானியற்றிய பாடலின் நேரெதிர் பொருளில் சூதர்வழி அசுரகுலத்திடையே பரவச் செய்த சொற்றுலா தான் இல்லையா. ஏனோ துரியனின் பிறப்பு குறித்த சூதர் பாடல்களை எண்ணி சகுனி கொதித்தது நினைவில் எழுகிறது.
             
சிவமீனாட்சி.