ஜெ
இரண்டு மனநிலைகள் மிக நுட்பமாக வெளிவந்துள்ளன. அவற்றை நான் மட்டும்தான் கவனித்தேனா என்று சந்தேகப்படுகிறேன்
தேவயானி நகைகள் செய்வது இயற்கையை பிரம்மனை இழிவுசெய்யும் மனிதனின் திமிர் அல்லது அறியாமை என்று நினைக்கிறாள். அதன்பின்னர்தான் அவள் அனைத்தையும் துறந்து காட்டுக்குச் செல்கிறாள்
யயாதி நேர்மாறாக நகைகள் செய்பவர்களைப்பார்த்து பிரம்மன் மகிழ்ச்சி அடைவான். அவர்கள் தந்தையை நடிக்கும் மைந்தரைப்போல என்று நினைக்கிறான்
இந்த இருமனநிலைகலும் ஒன்றொடொன்று தொடர்பு கொண்டவை. இருவர் இருநிலைகளில் பார்ப்பவை. இருவரில் நிலைகளை காட்டுபவை என தோன்றியது
ஆர், மகாதேவன்