Tuesday, April 25, 2017

கடிதங்கள்





ஜெ

பொதுவாக நானெல்லாம் வெண்முரசின் பல நுட்பங்களை வாசகர்களின் கடிதம் வழியாகவே வாசிக்கிறேன். அடடா இப்படியெல்லாம் வாசிக்கலாமோ என்று நினைத்தது ஒருகாலம். பிறகு நானே அதையெல்லாம் முன்னரே நுட்பமாக உணர ஆரம்பித்துவிட்டேன். இது ஒரு சிறந்த பயிற்சி. நான் சமீபகாலமாக கடிதங்களைக் காணாமல் கொஞ்சம் வருத்தப்பட்டேன். நிறையகடிதங்களை வெளியிடுங்கள். அவை வெண்முரசை ஒருநல்ல கூட்டான வாசிப்பனுபவமாக ஆக்குகின்றன
ஜெ