Thursday, April 6, 2017

மரவுரி

 
இனிய சகோதரனுக்கு 

இன்றைய மாமலரில் "நாய்க்குட்டியின் தோல் என மென்பரப்பு கொண்ட மரவுரிகள்" இந்த வரிகள். நாங்கள் நகை செய்யும் ஆசாரி குடும்பத்தை சேர்ந்தவர்கள். செய்து முடித்த நகைகளுக்கும்  கற்களுக்கும் மெருகு ஏற்றுவதற்கு பதப்படுத்தப்பட்ட நாய்த்தோல் பயன்படுத்தி தேய்ப்பார்கள். மிக மிக மென்மையானதாக இருக்கும். 

மரவுரிகளை அவ்வளவு மென்மையாய் செய்ய முடியுமா?  வண்ணக்கடல் 67ல் மரவுரி தயாரிப்பது பற்றி படித்தேன். பருத்தித் துணி போன்று மென்மையாகவோ அல்லது கதர் போன்று முரடாகவோ தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். தோலின் மென்மை கொண்டு வரமுடியும் என்பதே ஆச்சரியமானதாய் இருக்கிறது.

வாழ்த்துக்களுடன் 
டெய்சி.
அன்புள்ள டெய்ஸி

மரவுரி என்பது தொன்மையான லினன் தான். மரப்பட்டைநாரிலிருந்து அல்லது சணல்நாரிலிருந்து எடுப்பது. [நம் கற்றாழைப்பட்டுபோல] அது அன்று காட்டில் முரட்டு உடையாக இருந்தாலும் மெத்தை, திரைச்சீலை என்றெல்லாம் சாதாரணமாகப் பயன்பாட்டில் இருந்தது

ஜெ