அன்புள்ள ஜெ
வெண்முரசில் இந்தியா பற்றிய சித்திரம் பற்றி வாசித்துக்கொண்டிருந்தேன். விவாதங்கள்
சிறப்பானவை. அவற்றை வாசிக்கையில் நமக்கும் ஒரு சித்திரம் வருகிறது. எனக்கு தோன்றிய
ஒரு விஷயமும் உண்டு வெண்முரசிலே எல்லா ஊர்களுமே இரண்டிரண்டாகப்பகுக்கப்பட்டே வருகின்றன.
காடு- ஊர். நகரமும்- பழங்குடி ஊர்களும். எல்லா நிலப்பகுதியும் இரண்டாகவே உள்ளன. ஆனால்
பழங்குடியினரும் அழகான விசித்திரனான ஊர்களை உருவாக்கியிருக்கிறார்கள். தொங்கும் ஊர்கள்
மிதக்கும் ஊர்கள் எறும்புப்புற்று வீடுகள் குகையில் அமைந்த நகரம் எல்லாமே உள்ளன. இரண்டு
வகை நாகரீகங்களும் அருகருகே உள்ளன. அவற்றுக்கிடையே மோதல் உள்ளது. அந்த இரட்டைத்தன்மை
ஆரம்பம் முதலே நாவலில் பேணப்பட்டுள்ளது
ராம்குமார்