அன்புள்ள ஜெ,
வெண்முரசில் நிலங்கள் மக்களினங்கள் பற்றிய செய்திகள் வந்துகொண்டே
இருந்தன. வெவ்வேறு நிலங்கள். வெவ்வேறு மனிதக்குழுக்கள். அத்தனைபேரும் முட்டிக்கொண்டு
உரசிக்கொண்டு மேலேறத்துடிப்பதன் சித்திரம்தான் வெண்முரசு. மலைப்பழங்குடிகளில் இருந்து
சின்ன அரசுகள் வரைக்கும்.
ஆனால் வெண்முரசு தொடங்கும்போதே இந்த சிக்கல் இருந்துகொண்டிருக்கிறது.
ஏற்கனவே மச்சரினத்தைச் சேர்ந்த சத்யவதி அரசி ஆகிவிட்டாள். கங்கரினத்தைச் சேர்ந்த பீஷ்மர்
மகனாக வந்துவிட்டார். அதன்பின் யாதவக்குலத்து குந்தி வருகிறார். அந்த கலப்பும் அதன்
விளைவான சிக்கல்களும் முதற்கனல்முதலே வந்துகொண்டேதான் இருக்கின்றன
உண்மையில் அந்தச்சிக்கல் ஓரளவு ஓய்வது மகாபாரதப்போர் நடந்த பின்னாடிதான்.
குலக்கலப்பை எதிர்க்கு மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பிச் செல்கிறார்கள். புதியமனிதர்கள்
வந்து சேர்கிறார்கள். அஸ்தினபுரி புதியதாக உருவாகி எழுகிறது
எஸ்.செல்வக்குமார்