அன்புள்ள ஜெ
வெண்முரசில் நிலம்
வர்ணிக்கப்பட்டிருப்பதைப் பற்றிய கடிதங்களை வாசித்தேன். வெண்முரசு நிலங்களை குணரூபமாகக்
காட்டுகிறது. உதாரணமாக தென்னகம் வெண்முரசிலே இசை, கவிதை, மருத்துவம்,சோதிடம் ஆகியவற்றின்
விளைநிலமாகவே காட்டப்படுகிறது. தென்னகத்திலிருந்து இசைச்சூதர் வந்தாலே பரபரப்பாகிவிடுகிறார்கள்.
தென்னகத்து மருத்துவர்கள்தான் எல்லாவகையான சிகிச்சைகளையும் அளிக்கிறார்கள். இந்த மனச்சித்திரம்
நாவலில் உள்ளது. அதேபோல எல்லா சிற்பிகளும் கலிங்கர்களாகவே இருக்கிறார்கள். வணிகர்களும்
பெரும்பாலும் கலிங்கர்கள். கலிங்கம் வணிகத்துக்கு திறந்திருப்பதனாலேயே அது சிற்பக்கலையையும்
உருவாக்கிக்கொண்டது என்று தோன்றுகிறது
எஸ்.மகேந்திரன்