அன்புள்ள ஜெ
வெண்முரசில் நிலப்பரப்பு
எப்படி இருக்கிறது என்று கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த விவாதம் மிகவும் ஆர்வமூட்டுகிறது.
வெண்முரசு பாரதவர்ஷம் என்ற நிலப்பரப்பை உருவாக்குகிறது. அங்கே வெவ்வேறு வகையான மக்களையும்
அவர்களின் அரசியல்மோதல்களையும் உருவாக்குகிறது. சாப்பாடு உடை ஆகியவற்றை விரிவாகக் காட்டுகிறது.
கூடவே சிந்தனைகளையும் காட்டுகிறது. பாரதத்தில் அன்றிருந்த எல்லாச் சிந்தனைகளையும் வெண்முரசிலே
பார்க்கமுடிகிறது. இந்த மூன்றையும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிப்பார்க்கவேண்டும். தென்னகத்திலே
சமணம் வலுவாக பரவ ஆரம்பித்திருப்பதை நாம் வெண்முரசிலே காண்கிறோம். பல இடங்களில் பழங்குடிமதங்கள்
இருக்கின்றன. இந்த மூன்றையும் இணைத்து வாசிக்கவேண்டியது அவசியமென்று தோன்றுகிறது
சரவணக்குமார்