அன்புள்ள ஜெ
வெண்முரசிலிருந்து வரிகளை
எடுத்து நினைவில் வைக்கலாமா? நவீன இலக்கியத்தில் பலசமயம் அப்படிப்பட்ட வரிகள் இல்லை.
ஆனால் உலக இலக்கியத்தில் நான் வாசித்த பெரிய படைப்புகளிலெல்லாம் அப்படிப்பட்ட வரிகள்
உண்டு. அவற்றை தவிர்க்கமுடிவதே இல்லை. இந்த உதிரிவரிகள் சிலசமயம் தனியாகவே பொருள் தருபவை.
ஆனால் பலசமயம் அவை வெண்முரசு நாவலில் வரும் ஒட்டுமொத்த காட்சிகளையே மீண்டும் ஆழமாக
புரிந்துகொள்ள வழிவகுப்பவை
பெண்டிர் ஆண்கள் துயருற்றிருப்பதை விரும்புகிறார்கள், அது இறுகிய நிலம் மீது பெருமழை பெய்து மண் இளகுவதுபோல் அவர்கள் மேல் தாங்கள் வேர் விடுவதற்கு உகந்தது.
என்ற வரியை வாசித்தேன். அர்ஜுனன்
மேல் அத்தனை பெண்களுக்கும் இருக்கும் ஈர்ப்புக்கான காரணம் என்ன? அவன் எப்போதும் துக்கமானவன்,
அலைந்துகொண்டே இருப்பவன். அந்த ஞானதுக்கம்தான் பெண்களை கவர்கிறது என்று கொள்ளமுடியுமா?
ஆ.என்.குமார்