Tuesday, November 8, 2016

காவியம் என்பது






ஜெ


 பிறந்து வாடும் மலருக்குள் மலரென்று ஒன்று அழியாதிருக்கலாகும்


சுருங்கி விரியும் காலப்பெருக்குக்குள் காலமென்று தன்னை நிகழ்த்தும் ஒன்று அழியாதிருக்கலாம்


பொருள் கொண்டு பொருள் அளித்து பிறந்து இறக்கும் சொல்லுக்குள் சொல்லென்று வாழும் தெய்வம் என்றுமிருக்கலாம்


என்னும் வரிகளை வாசித்துக்கொண்டே இருந்தேன். காவியம் என்பது கவிதைகளால் கட்டி எழுப்பப்படும் கட்டிடம். வெண்முரசு நாவல் அல்ல காவியம் என்று சுட்டிக்காட்டும் இடங்களில் ஒன்று இது

அந்த அழிவின்மை ஏன் மனிதனுக்குத்தேவையாகிறது என அர்ஜுனன் நினைக்கும் இடத்தில் வேறொரு இடத்தை அடைகிறது காவியம்

ஜெயராமன்