Saturday, October 6, 2018

போரின் ஒருமை



அன்புள்ள ஜெ


மகாபாரதப்போரை நான் இரண்டு நூல்களில் வாசித்திருக்கிறேன். வர்தமானன் மகாபாரதத்தில் வாசிக்கும்போது என்ன இது போர் ஒரே மாதிரி சொல்லப்பட்டிருக்கிறதே என்று தோன்றியது. ஒருவரை ஒருவர் இத்தனை அம்புகளால் அடித்தான், கொடியை உடைத்தான் என்றுதான் மீண்டும் மீண்டும் வரும். பின்னர் கும்பகோணம் பதிப்பை வாசித்தபோது அதில் இன்னும் நீளமாக அதேசமயம் இன்னும் மொனோடொனஸ் ஆகவே அந்தப்போர் சொல்லப்பட்டிருந்தது. ஸ்ங்குல யுத்தம் என்று வந்துகொண்டே இருக்கும். திரும்பத்திரும்ப, புரட்டிபபர்த்து முன்னாடியே வாசித்ததா என்று பார்க்கவேண்டியிருக்கும்.

வெண்முரசில் பீஷ்மரின் எட்டு வீழ்ச்சிநிலைகள் என்று சொல்லி தொடங்கியதும் சரி, வெவ்வேறு கதாபாத்திரங்களின் மனநிலைகள், போர்க்களத்தின் பின்னணிநிலைமைகள் என்று கதை சொல்வதும் சரி அந்த மொனோடொனியை குறைக்கிறது. போர் திரும்பத்திரும்ப ஒரே மாதிரி நிகழ்வதையும் ஆனால் படிப்படியான குணமாறுதல் உருவாவதையும் கதை காட்டுகிறது. கொஞ்சம்கொஞ்சமாக எல்லாருமே சலிப்புற்று எல்லைகளை அறியாமல் மீறிக்கொண்டிருக்கிறார்கள். எல்லா எல்லைகளையும் மீறியதுமே கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள் என நினைக்கிறேன்


ராஜகோபால் மகாலிங்கம்