அன்புள்ள ஜெ
வெண்முரசில் அபிமன்யூவைப் பார்த்தபோது ஆரம்பத்தில் ஓர் ஆர்வமும் பிரியமும் வந்தது.
அற்புதமான இளைஞன், உற்சாகமானவன் என்ற எண்ணம். அவனுக்குச் சிந்தனைகள் ஏதுமில்லை. தத்துவம்
இல்லை. அவனுடைய உணர்ச்சிகள் கூடச் சொல்லப்படவே இல்லை. ஆனால் போர்க்களத்தில் அவனுடைய
முதிர்ச்சி இல்லாத நடத்தையும் அவனுடைய சில்லறைத்தனமும் வெறியும் மிகவும் எரிச்சலை ஊட்டுகின்றன.
ஆரம்பம் முதலே அவனை இப்படி முதிரிச்சியில்லாமல் துள்ளிக்கொண்டிருப்பவராகவே காட்டிவந்திருக்கிறது
வெண்முரசு என்றாலும் போர்க்களத்தில் அவனுடைய நடத்தை மரியாதையே இல்லாமலிருப்பது எரிச்சலைத்தான்
அளிக்கிறது
மனோகர்