ஜெ
பிரலம்பனின் கதையின் முடிவு மனசைப் பாரமாக ஆக்கியது. ஒவ்வொரு கதையாக இப்படி
வந்து முடிந்துகொண்டிருக்கிறது. அபிமன்யூ அவனை வலுக்கட்டாயமாக இழுத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டது
முதல் தொடங்கி மெல்லமெல்ல ஒழுகி இந்த இறப்புக்கு வந்துசேர்ந்திருக்கிறான். அவனுடைய
சாவுக்கு பெரிய இதிகாசப்பின்னணி வராது. ஆனால் அவன் வரையில் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து
முடித்திருக்கிறான் என்று தோன்றுகிறது. மிகச்சாதாரணமான கதாபாத்திரம். ஆனால் அவனுடைய
சாதாரணத்தன்மையாலேயே அசாதாரணமாக ஆகிவிட்டது
ராஜ்