அன்புள்ள ஜெ
அசங்கனின் பின்கதை
என நெகிழ்வான ஒரு பகுதி வரும்போதே மூர்க்கமான போரின் காட்சிகள் தொடர்ந்து வரப்போகின்றன
என்ற எண்ணம் ஏற்பட்டது. இது முன்னால் பாய்வதற்கான ஒரு பின்னால் நகர்தல்தான் என நினைத்தேன்.கடோத்கஜனின் போர்க்களப்பகுதி கொடூரம்.
இந்த உத்தி பாரதத்தில் வியாசனும் கடைக்கொண்டதுதான். போருக்குநடுவே நீண்ட முன்கதைகளும்
அறவுரைகளும் வந்து இடைவேளையாக அமைகின்றன
ஆச்சரியம் என்னவென்றால் கள்ளமற்றவனாகவும் அன்பானவனாகவும்தான் கடோத்கஜன் காட்டப்படுகிறான். அவனுடைய மறுபக்கம்தான் இந்தக்குரூரமா இல்லை இரண்டும் ஒன்றேதானா என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்
சிவக்குமார்