ஜெ
ஹெமிங்வே நாவல் ஒன்றில் [ஃபார் ஹூம் த பெல் டால்ச் என்று ஞாபகம்] போரின் கொடூரமான சூழலில் இருவர் உடலுறவுகொள்ளும் காட்சி கொஞ்சம்கூட ரோமான்ஸ் இல்லாமல் நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கும். அதை நான் முதலில் வாசித்தபோது ஒரு விறுவிறுப்பு மாதிரி இருந்தது. அது விசித்திரமாக இருந்தாலும் அதை உணரமுடிந்தது. பின்னர் பலநாவல்களில் இந்தக் காட்சியை வாசித்தேன். ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் நாவல்களில்கூட. ஆனால் ஹெமிங்வே நாவல்தான் அதில் டாப். அந்த உடலுறவில் அவளுக்கு காட்சிகள் ஆடுவதுபோலத் தெரியும். அப்படி தெரியுமா ஆண்களுக்கு என்று அவள் கேட்பாள். இல்லை என்று அவன் சொல்வான். அவள் அந்தப்போர்க்களச் சூழலில் மிகவும் அடிபட்டு நொந்துபோன பெண்ணாக இருப்பாள். மொட்டை எல்லாம் போட்டிருப்பாள் என்று ஞாபகம். ரொம்பநாள் ஆகிவிட்டது. அந்தக்காட்சி மறக்கவில்லை. அதை இப்போது அசங்கன் சௌம்யை உறவை வாசிக்கும்போது உணர்ந்தேன். போருக்கு முன்னாடியே அவர்கள் நின்றுவிடுகிறார்கள். அவர்களுடையது காதலே கிடையாது. பிள்ளைபெறுவதற்கான உறவுதான். ஆனால் அந்தப்போர்க்களச்சூழலும் அவன் சாகக்கூடும் என்பதும் அந்த உறவை வினோதமாக ஆக்குகிறது
செல்வன்.