Tuesday, January 1, 2019

மூன்றுகதைகள்




அன்புள்ள ஜெ

கார்கடலின் தொடக்கத்தில் மூன்றுவகை கதைமரபுகள் சொல்லப்படுகின்றன. இந்நாவலில் மூன்றுவகையான கதைகள் வரப்போகின்றன என்பதற்கான முன்னோட்டம் அது என்று எனக்குத் தோன்றியது. மூன்றுகதைகளும் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. முரண்படுகின்றன

ஒன்று நாகர்களின் கதை. இன்னொன்று அசுரர்களின் கதை. இன்னொன்று வைதிகமரபின் கதை. இன்றைக்கு வைதிகமரபு மட்டும்தான் உள்ளது. ஆனால் அது மகாபாரதத்தை உருவாக்கியிருக்கிறது. மகாபாரதத்தில் மற்ற இரண்டு மரபுகளும் உள்ளடங்கியிருக்கின்றன. மூன்றையும் மாறிமாறி இதுவரை வெண்முரசு சொல்லிவந்திருக்கிறது. இந்நாவலில் மூன்றையும் கலந்து ஒரு சித்திரத்தை உருவாக்கப்போகிறீர்கள் என நினைக்கிறேன்

ராமச்சந்திரன்