Friday, January 4, 2019

இருட்பெருங்கடல்




கார்கடல் - 1




அண்டங்கள் ஒளிக்குமிழிகளாக   தோன்றி மறைந்திடும்  அதுவன்றி வேறற்ற இருள்பெரு வெளி

உயிருள்ளவை உயிரற்றவை என அனைத்தையும் தன்னுள்ளிருந்து ஆக்கி தான் உடன் நின்று  காத்து தன்னுள் அமிழ்த்தழித்துக் கொள்ளும் கார்பெருங்கடல்.

 இன்று என்ற சிற்றகல்  விளக்கொளியில் சிறிதே புலப்படும் முதல் முடிவு தெரியாத  நீளிருள் காலத்தடம்

நடப்பவை இவையென கணித்தறிய  முடியாத கனத்த இருள் மூடிய ஊழ்.

அறிவிது அழகிது அறமிது நலமிது என அறிய விடாமல் அகத்தை மறைத்திடும் காரிருள் மாயை

எல்லா உயிரும் பிறப்பெடுத்து கிளம்பும் இருள் மகாயோனி.

உயிரனைத்தும் அறிந்தும்  அறியாமலும், விரும்பியும் விரும்பாலும் சென்று விழும்  இறப்பெனும் இருண்ட பெரும்பிலம்

இவையாக விளங்கும்  பேரிருள்  யாவும்  ஒன்றெனக்  குவிந்து ஓருடல் தாங்கி  கோலமயிலிறகு சூடி குழலூதி நிற்கும் கரியன்.

அவன் சிந்தை சென்ற வழியில் சென்றிறந்த செருகளம் நின்றோரின் கதை கூறவிருக்கிறது  கார்கடல்.

வெண்முரசு தடாகத்தில் மற்றொன்றாய்  பூக்க்கிறது இந்தக் கருநீல பெருமலர்.


தண்டபாணி துரைவேல்