Saturday, January 5, 2019

வரலாறை புனைந்துகொள்ளுதல்




கார்கடல் -1


       நாளைய நிகழ்வுகள் நாம் அறியாதது எனினும்அந்நாளைக் கடக்கையில் அதை  நாம் அறிந்துகொள்வோம்.   ஆனால் நேற்று என்பது இன்று வாழ்பவர்களின் நினைவுத் தொகுப்பு. எப்படித் தொகுத்தாலும் விடுபடல்களும் தவறுகளும் நிறைந்தாய் அது இருக்கும்ஆகவே நினைவுகளில் மறவாதிருக்கும் தகவல்களைக்கொண்டு நேற்றைய  தினத்தை நாம் புனைந்துகொள்கிறோம்அவ்வாறே காலத்தில் இன்னும் அழிந்து விடாமல் இருக்கும்நாம் ஏற்கும்சில  தடயங்களைக்கொண்டு   நாம் வரலாறை எழுதுகிறோம்ஆகவே வரலாறு என்பது நாட்டுக்கு நாடு இனத்திற்கு இனம் குடும்பத்திற்கு குடும்பம் வெவ்வேறாக  இருக்கிறது

       பண்டைய  வரலாறுக்கான தடயங்கள் குறைந்து இருப்பதால் அதில் புனைவுகள் அதிகமாகிவிடுகின்றனஇனங்களும் குலங்களும், குடும்பங்களும்  தங்களுக்கென்று வரலாறுகளை புனைந்துகொண்டு தம்மை அடையாளப்படுத்திகொள்கின்றனஅவை அவ்வவற்றிக்கான  புராணங்களாக அமைகின்றனஅவர்களின் மனிதனின்  தொடக்கத்தை புனையும் வரலாறு வெவ்வேறாக இருப்பதற்கு காரணங்களாக   இன்றைய வாழ்வில் அவர்கள் இருக்கும் நிலையும், கடைபிடிக்கும் பண்புகளும், பின்பற்றும் அறங்களும், கொண்டிருக்கும் பகைகளும் அதன் காரணமான வஞ்சங்களும் அமைகின்றன.  
     
     இன்னும் முன்னாலானமனித தோற்றத்துக்கு முந்தைய,   வரலாறை அவர்கள் இயற்கையைக் நோக்கி அதில்  காணும் சில ஒற்றுமை வேற்றுமைகளை குறியீடுகளாகக் கொண்டு தம் புனைவுகளாக  விரித்துக்கொள்கின்றனர். குறியீடுகள் காலத்தில் சிதறி  அழிந்து  விடாமல் இருக்க அவை கதைகளில் பதிந்து வைக்கப்படுகின்றன. கதைகள் ஒன்றுடன் ஒன்று கூடியும் ஊடியும் புராணங்களாக வடிவெடுக்கின்றன. கவி அதை காப்பியங்களாக பெருக்கி அவற்றுக்கு அழியாமையை அளிக்கின்றான்.
         
  அப்படியான  மூன்று புராணங்களை நமக்கு தருகிறது வெண்முரசின் இன்றைய பகுதி. நாகங்களின், யானைகளின், செம்பருந்துகளின்  வழித்தோன்றல்களாகவும்  அதன் காரணமாக அவற்றை தம் மூதாதையர் என்று எண்ணி வழிபடுபவர்களாக கருதும் மூன்று வகை புராணங்களை பின்பற்றும் மனிதர்கள் இன்று  கூறப்படுகின்றனர்.   தாமச ராட்சத  சத்துவ குணங்களைப் அடையாளப்படுத்தும்  முப்பிரிவினராகளாக நாம் அதைக்கொள்ளலாம் என எண்ணுகிறேன்அந்தக் குண வேறுபாடுகள் அந்த முப்பிரிவு மனிதர்களுக்கிடையிலான பகைகளுக்கும் வஞ்சங்களுக்கும் காரணமாக அமைகின்றன. குருஷேத்திரப்போரில் இந்த வஞ்சங்கள் ஆற்றப்போகும் பங்கை கார்கடல் விவரிக்கும் என இப்பகுதி நமக்கு முன்னறிவிக்கிறது என நான் நினைக்கிறேன்

தண்டபாணி துரைவேல்