Wednesday, February 24, 2016

மயனீர் மாளிகை – 20



இனிய ஷண்முகவேல்,

இன்றைய ஓவியம் மிக மிக அழகு. குறிப்பாக  பாரத மாந்தர்களின் துலக்கம் பெற்றுவிட்ட அனைவர் முகங்களும் பெரும்பாலும் ஓவியங்களில் அருபமாகவே வருகையில் . இந்த ஒரே அத்யாத்தில் வந்து போகப் போகும் முகமிலியான அரங்குசொல்லிக்கு  முகம் அளித்த நோக்கு

அடுத்து  புகைப்படக் கருவியில் செயல்படும் அவுட் ஆப் போகஸ், டீப் போகஸ் முறையை ஓவியத்தில் முயன்று பார்த்த விதம். பார்வையாளர்கள் உருவம் அவுட் ஆப் போகஸில் இருக்க, அரங்குசொல்லி முகம் டீப் போகஸில் இருக்கிறது.

அடுத்து புகைப்படக் கருவியில் அசைவைக் கைப்பற்றும் மோட் இயங்கவில்லை என்றால் நிகழும் பிழையை ஓவியத்தில் கொண்டு வந்து பார்த்த விதம்.  கேமராவின் ஷட்டர் இயங்கும் கணத்துக்குள், அது அசையும் வேகத்தை விட , வேகமாக அசையும் பொருள் ப்ளர் என்ற நிலையில்தான் பதிவாகும்.  அந்த நிலையில் இருக்கிறது அரங்கு சொல்லியின் கைகள்.

ஓவியருமாக புகைப்படக் கருவியுமாக ஒரே நேரம் கூடு விட்டுக் கூடு பாய்ந்ததால் நிகழ்ந்த கலை வெற்றி இன்றைய ஓவியம்.  நீங்க கலக்குங்க தலைவா.....