கர்ணனைச்சுற்றி
பாம்புபோல விதி சுற்றிப்பிணைப்பதைப்பார்க்கமுடிகிறது. அவன் மனதில் இருந்த துளியளவு
வஞ்சத்தை அந்தக்கிழவி தூண்டிவிடுகிறாள். அது அவனைத் தொடர்கிறது. வளார்ந்துகொண்டே இருக்கிறது.
அவன்குந்தியிடம் முன்னர் நடந்துகொண்டது போல இம்முறை இல்லை. வஞ்சத்தைச் சுவைக்கிறேன்
என்ரு சொல்கிறான். அதேபோல மேலும் மேலும் கோபம் கொண்டவனாக ஆகிறான். அவனுடைய ஆளுமையிலே
வந்துகொண்டிருக்கும் இந்த மாற்றம் மிகநுட்பமானது என்று நினைக்கிறேன்
பாரதி