ஜெ
திரௌபதியை ஓர்
எல்லையிலும் மறு எல்லையில் கண்ணனையும் நிறுத்தியபடிச் செல்லும் வெண்முரசின் மையமே அங்கதநாடகத்திலும்
எதிரொலிக்கிறது. திரௌபதி நாராயணி. கண்ணன் நாராயணன். இருவருமே ஆக்கமும் அழிவும் கலந்த
தெய்வ உருவங்கள் எனத்தெரிகிறது. இந்த யூனிட்டி ஆச்சரியமளிக்கிறது
அங்கதநாடகத்தை
மட்டும் தனியாக எடுத்து விவாதிக்கவேண்டும் என நினைக்கிறேன்.அதில் நீங்கள் சொல்லிவரும் பல நுட்பமான விஷயங்கள் மடித்து மடித்து வேறுவகையில் சொல்லப்பட்டுள்ளன
ஜெயராமன்