ஜெ
எல்லாம்
தற்செயல் தான் அல்லது மிக கூர்மையாக செதுக்கப்பட்ட அட்டவணை. சுள்ளென்று
கோபம் தலைக்குள் எரிகிறது... நீங்கள் எப்படி விவரித்து எழுதும் போது.
உங்களின் கற்பனை உங்களின் உரிமை.
ஆனால் ஒருவனை கீழ் அழுந்த வைக்க
எல்லா சந்தர்ப்பங்களையும் உபயோகித்து கொண்டீர்கள். களம் விட்டு இறங்கி
வருகையில் விலகிய குண்டனும் வில்லனும் - பின் ஒருக்கி கொடுத்த தனி மாளிகை -
இன்று அரண்மனை புகும் போது நடக்கும் கூத்துகள் - பெற்றுடுத்த பெருந்தாயார்
தன் பங்குக்கு தலை நீவுதல் போல அவனை சீராட்ட தலைபடுதல் ..... மெழுகு போட்ட
மீசையை நீவி கொண்டு உயிருடன் இருப்பதற்கு தனி வலிவு வேண்டும்.
இத்தனை
அரசர்களை அழைத்த அழகிக்கு அங்க நாடு மறந்து போயிருக்ககூடும்... பாவம்.
எத்தனை வேலைகள் பாண்டவர்களுக்கு. மண விழாவிற்கு அழைக்க மறப்பது சாதாரணமாக
நடக்கும் போது, நாடு திறப்பு விழா அல்லவா? மறக்க தான் வேண்டும். அல்லது
எல்லாம் திட்டமிடப்பட்ட, சரியான முறைமைபடி தான் நடக்கிறது...
துரியன்
இதை பற்றி எல்லாம் உணராமல் மாளிகை பார்த்து வாய் திறந்து இருக்க கூடும். .
இவன் வாங்கிய வரம் அப்படி போல. கிடந்து உருக வேண்டும் என...
அயன்மீர்,
தன் அரச மனைவி வழியாக, சுற்றிலும் இருக்கும் பழைய ஷத்ரிய பகைமை வழியாக,
இன்று இந்த மாதிரி விழாக்களின் போதும்.. என கிடைக்கும் எல்லா வழிகளிலும்
முட்ட முட்ட குத்தி கொன்று எழுதி செல்கறீர்கள். வஞ்சம் வராமல் ஆணி வேறாக
நிற்கும் அனலவள் மீது மன்னித்து ஏந்தும் பேரன்பா வரும் ??