Wednesday, February 10, 2016

மகதமும், அஸ்தினபுரியும்

 


 
மகதமும், அஸ்தினபுரியும் பரம்பரை பகை நாடுகள். ஆனால் அவை இரண்டும் பாரதப் போரில் ஒரே அணியில் நிற்கின்றன. இது எவ்வாறு நிகழக் கூடும்? காரணம் கர்ணன்!!! உண்மையில் இன்றைய அத்தியாயத்தின் 'அங்கரே, நானே இவர் என்று எண்ணும் ஒரு நட்பு இதுவரை எனக்கு அமைந்ததில்லை. ஏனென்றால் நான் அசுரனுமல்ல ஷத்ரியனுமல்ல. எந்த ஆண்மகனும் அத்தகையதோர் நட்புக்கென உள்ளூற தவித்திருப்பான் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். என் கற்பனையில் தாங்கள் ஒருவரே அணுக்கமாக இருந்தீர்கள். தாங்கள் என்னுடன் இருக்கும் சில நாட்களாவது அவ்வாழ்வை முழுமையாக வாழ்வேன்' - இதுவே காரணம். 

இன்றைய கர்ணன் ஜராசந்தன் சந்திப்பு ஆசானின் கதை சொல்லும் திறனின் உச்சம்... பாரதத்தின் கதை நிகழ்வுகள் மட்டுமே நமக்குத் தெரியும். அந்நிகழ்வுகளை ஆழ்ந்து சிந்தித்து, ஒரு வகையில் தியானித்து தன் அறிதல்களை அடையும் ஒருவரால் மட்டுமே கதையின் இடைவெளிகளை இப்படியெல்லாம் நிரப்ப இயலும்
 
அருணாச்சலம் மகராஜன்