Tuesday, February 9, 2016

ஜராசந்தன்



ஜெ

வெண்முரசில் ஜராசந்தனின் வரவு ஒரு பெரிய ஆச்சரியம் எதிர்பார்க்கவே இல்லை. அவன் ஒரு மூர்க்கனான கொடுங்கோலன் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். அவனுக்கு கர்ணன் மேல் இத்தனை கனிவா? அவனுக்கு இவ்வளவு பெருந்தன்மையா?

ஆகவே பின்னால் சென்று நீங்கள் எழுதியவற்றை வாசித்தால் ஆச்சரியம், ஜராசந்தன் நேரில் வரும்போது அப்படித்தான் இருக்கிறார். அவரைப்பற்றிய மற்றவர் பேச்சுக்களில் கொடுங்கோலன். கர்ணனை பாஞ்சாலி சுயம்வரத்தில் கட்டித்தழுவுகிறார். கர்ணன் கலிங்க இளவரசியைக் கவர்ந்துசெல்லும்போது அவர் ஆதரிக்கிறார்.

இத்தனை நுட்பமாக கர்ணனின் கதாபாத்திரம் முன்னாடியே உருவாகி வந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது

எஸ். ராகவன்