Friday, February 19, 2016

நாக வரலாறு






ஜெ

வெண்முரசில் நாகர்களின் கதை தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறது. கர்ணனிடம் நாகர்கள் சொல்லும் கதையை வாசித்தபோது இந்து எந்த அளவுக்கு யூனிட்டியுடன் இருக்கிறது என்று ஆரம்பம் முதலே போய் வாசித்தேன். மிகத்தெளிவான ஒரு சமாந்தரமான சரித்திரம் இருப்பது வியப்பளித்தது

மானசாதேவி சொல்லும் கதையிலிருந்துதான் வெண்முரசு ஆரம்பிக்கிறது. அதன்பின் பல நாகங்கள். கர்ணனைத் தொடர்ந்துவரும் நாகம் உட்பட ஏராளமான நாகங்கள் அவையெல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கதை ஆகின்றன. கதை வளர வளர எல்லா கதைகளும் மேலும் துலக்கம் கொள்கின்றன. மானசாதேவி சொல்லும் கதையை இன்று நாகவரலாறு சொல்வதுடன் இணைத்தால்தான் சரியாகப்புரிகிறது

சண்முகம்