ஜெ,
அக்னிதெவன் அர்ஜுனனுக்கு
விழைவை அறுத்து மல்லிகார்ஜுனன் ஆகும்படி அறிவுறுத்துகிறான். அதேசமயம் கிருஷ்ணனிடம்
விழைவைப்பெருக்கும்படி சொல்கிறான். சிவன் விழைவை அறுத்தான். காமனை எரித்தான். விஷ்ணு
காமனைப்பெருக்கினார். ஏனென்றால் அவர் கல்யாணகோலாகலன். இந்த நுட்பத்தை அந்த வரிகளிலே
வாசித்தேன். ஆச்சரியமாக இருந்தது. ஒரே செயல் இரண்டுவகையிலே பொருள்படுகிறது
கருணாகரன்