ஜெ
நாகங்களின் அழிவு
வருத்தமூட்டியது. நாகர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த ஓர் இனம் என்றால் இந்த அழிவுக்கு
அனைவரும் பொறுப்பேற்கத்தான் வேண்டும். அந்த அழிவை ஒரு அரசியலாக மட்டும் முன்வைக்காமல்
அதன் எல்லா தரப்பையும் பேசவிட்டு முன்கொண்டு செல்கிறிர்கள். அந்த அழிவின் சாராம்சமான
வஞ்சம் கர்ணனின் அம்பிலே எழுந்தது என்பது ஓர் அற்புதமான டிவிஸ்ட். அது கர்ணன் அறச்செல்வன்
என்பதற்கும் சான்று. அவன் உள்ளத்தில் வாழ்வது எது? நீதியுணர்ச்சிதானே? அதனால்தானே அவன்
எளியவர்களின் உள்ளத்தின் கண்ணீரை ஏற்றுக்கொண்டான்? அவன் அம்பிலிருந்த நஞ்சு அந்தக்கண்ணீர்தானே?
மனோகர்