வெண்முரசில் உள்ள
நாகங்களைப்பார்க்கையில் ஓர் எண்ணம் வருகிறது. மேலைநாட்டு தொன்மங்களில் பாம்புகள் எப்போதும்
தண்ணீருடன் தொடர்புள்ளவை. இங்கே அவை பறக்கக்கூடியவையாகவும், மண்ணுகுள் ஆழத்தில் வாழ்பவையாகவும்,
நீருக்குள் இருப்பவையாகவும் எல்லாம் இருக்கின்றன. இங்கே பலவகையான நாகர்களின் கதைகள்
இருந்திருக்கலாம் என்றும் அவையெல்லாம் ஒன்றாகி கலந்து ஒரே புராணமாக இருந்து பின்னர்
சிதறி அழிந்திருக்கலாம் என்றும் நினைக்கத்தோன்றுகிறது
ஜெயராமன்