ஜெ
ஜராசந்தனின் குரூரத்தைப்பார்க்கையில்
முன்பு எப்போதோ அர்ஜுனன் இதைப்பற்றிப் பேசியிருப்பது நினைவுக்கு வந்தது. பழங்குடி அரசர்கள்
செய்யும் நிகரற்ற குரூரங்களைச் சத்திரியர் செய்யமுடியாது என்று சொன்னான். ஏனென்றால்
பழங்குடி அரசர்கள் இன்னொசெண்ட் ஆனவர்கள். அவர்களால்தான் அத்தனை உண்மையாக நம்பி ஒரு
குரூரத்தைச் செய்யமுடியும். மற்றவர்களுக்கு அப்படி தான் செய்வது நல்லதே என நம்ப முடியாது.
உள்ளூர உண்மை தெரிந்திருக்கும். அவர்களின் மனசாட்சி உறுத்தும்
ஜராசந்தன் பயமுறுத்தக்கூடிய
கதாபாத்திரம். கூடவே பெரிய ஒரு நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறார். வெறும் வில்லனாக
இல்லாமல் இப்படி ஒரு கதாபாத்திரமாக அவனைக் காட்டியதை நினைத்து வியக்கிறேன்
சண்முகம்