கர்னனுக்கு அளிக்கபடும் முன்வரிசை வென்முரசில் நெடுக குந்தி கர்னனிடம் காட்டும் ஒரு கரிசனம் என்றும் கொள்ளலாம்.
பேரரசி தங்களை சந்திக்க வேண்டுமென்று அமைச்சரிடம் கேட்டிருக்கிறார்.
ஒன்றும் புரியாவிட்டாலும் நெஞ்சு படபடக்க “யார்?” என்றான் கர்ணன்.
“இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி. மார்த்திகாவதியின் குந்திதேவி” என்றார்.
பீமனும் மார்திகாவதியின் குந்தியின் அழைப்பை கர்னனிடம் சொல்கிறான்.
கர்னன் இங்கு செய்வது முதன்மையாக அந்த அழைப்பை, கரிசனத்தை நாடியோ ஏற்றோ இங்கு இல்லை என்பதை தெரிவிக்கிறான்.
அடுத்து, செய்தி வந்தது விதுரரின் செய்தியாக. அவரும் இவனிடம் காட்டுவது கரிசனம்.
அடுத்து, அவர் எந்த நாட்டின் அமைச்சர் என்பதே இங்கு கேள்விக்கு உள்ளாகிறது. தொடர்ந்து வந்த சம்பவங்களை கவனிக்கலாம்.
கர்னன் சொல்லும் கடைசி வரி இதை விதுரர் சொஞ்சம் உனர்ந்தால் பரவாயில்லை என்பது போல சொல்வதாக எனக்கு தோண்றியது.
கர்னனிடம் இங்கும் இனியும் இருக்கபோவது இந்த தம்பியர் மட்டுமே. துரியோதனனும் அதனால் அஸ்தினபுரியின் நலனும் மட்டுமே.
அவன் அரசியலை நாட்டம் இல்லாவ்விட்டாலும் துரியோதனனை போல அரசியல் புரியாத, அப்பார்பட்டவன் அல்ல.
எனக்கு, இவர்கள் அரசியலில் கர்னன் கைபாவையாக இருக்க மாட்டேன் என்று சொல்வதாக படுகிறது. துரியோதனன் தன்னை இந்தா என்று இவர்கள் ஆடலுக்காக கொடுக்கிறான்.
சட்டென்று தோன்றுகிறது, அங்கு பாஞ்சாலத்தில் ஊருக்கு வெளியே இருந்த கோவிலில் ஒருவன் பின் ஒருவனாக தங்கள் கழுத்தை அருத்து கொடுத்த இருவர் இந்த இருவர் தானோ?
ராகவ்