அன்பின் ஜெ,
காண்டவத்தில் காண்டவ வனத்தை எரிக்கும் நிகழ்வு இல்லை எனும்
போதே பின் ஒரு முறை பெரும் கதை என எழுந்து வரும் என்று
நினைத்தேன்.கர்ணனும் துரியோதனனும் இந்திரபிரஸ்தம் செல்லும் நிகழ்வு
வந்தவுடன் அது சூதர் பாடலாய், ஒரு நாடகமாய் அங்கு நிகழ்த்தப் படும் என்றும்
,கர்ணன் முன் தருக்கி எழ திரௌபதி கொள்ளும் ஒரு காரணமாய் அமையும் என்றும்
நினைத்தேன்.அதனால் அதை நாகர்களை கொண்டு சொல்ல வைத்தது அழகானது.தோற்று
ஓடியவர்களின் கதை.தோல்வியின் வலி.வருங்கலத்தில் அவனும் அவ்வாறுதான் பாடப்
பட போகிறான்.கண்ணனும் அர்ஜுனனும் வெற்றி வீரர்களாய் இருக்க தோல்விவியின்
துணைவனாய் இருப்பவனிடம் தோற்று ஓடுபவர்கள் சொல்லும் கதை எனவும்
நினைத்தேன்.அனால் திரியை அவனுள் அவன் காணாது இருந்த வஞ்சத்தை மட்டுமே
உணர்த்திச் செல்கிறாள்.ஆறாத வஞ்சம் கொண்டு செல்பவர்கள் அவ்வஞ்சத்தை அவனுள்
விதைத்து விட்டு செல்கின்றனர்.எரிந்தழிந்த வனத்தின் கதையும் அவனுள்
எழப்போகும் வஞ்சமும் திரையின் பின் என உள்ளது.உங்கள் பேனாவின் முனை
அத்திரையைக் கிழித்துச் செல்லட்டும்.
அன்புடன்
செந்தில்நாதன்