அரங்கு சொல்லியின் பாத்திரப்படைப்பு அற்புதம். மிக மிக சதாரணமான ஒரு சிறிய பாத்திரம் ஆனால் அதை எத்தனை அழகாக ஆழமாக சித்தரித்து நம் மனதில் பதித்து விட்டார். அரங்கு சொல்லி ஒரு கையில் பிரம்பினால் அடித்துக்கொண்டே வருகையிலேயெ அவரின் confident ஆன உடல்மொழி நமக்கு புரிந்து விடுகிறது. அதற்குப்பின் என்ன ஒரு கேலி, என்ன ஒரு கிண்டல்,என்ன ஒரு தைரியம்? பாஞ்சாலி தொடங்கி, இளைய யாதவர் வரை ஒருவர் விடாமல் கிண்டல் பண்ணி கடைசியில் விண்ணோர்களையும், தேவர்களையும் (அவி உண்டு செரிக்காத!!!!!!!!!) கூட விட்டுவிடாமல் கிண்டல் பண்னுகிறார்.நாங்கள் மூவரும் சிரித்து வாசித்தோம் இன்றைய பகுதியை. அங்கத சுவை என்றால் என்ன என்று மட்டும் புரியவில்லை?
லோகமாதேவி