அன்புள்ள ஜெயமோகன்,
இன்று
என் நண்பனிடம் பெருவெடிப்பைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது ஏனோ
மீண்டும் முதற்கனலைப் படிக்கத் தூண்டியதால் படித்தேன். பெருவெடிப்பைப்
பற்றி அருமையான படிம வர்ணனை. அதன் பின்தான் இந்து தமிழ் நாளிதழில்
ஐன்ஸ்டீனின் "ஈர்ப்பு கவர்ச்சி அலைகள்"(gravitational waves) கோட்பாடு
கண்டடையப் பட்டுள்ளதைப் பற்றிய கட்டுரையையும் பிபிசியில் வெளிவந்த இந்த
கட்டுரையையும் வாசித்தேன். உண்மையில் நாம் பண்பாட்டில் இப்பிரபஞ்சத்தை
பற்றி எவ்வளவு கருத்துக்கள் உள்ளன. நம் தேடல் என்றுமே ஆன்மீகமும்
அறிவியலும் கலந்தே இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.
இப்படிக்கு,
லோ. கவின் ராஜ்குமார்,
கோவை.