Tuesday, February 23, 2016

கவிஞன்



வெடித்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்..... அபாரமான அங்கதம்... அதுவும் அந்த கவிஞன்... வேறு யார் நம்ம ஆசான் தான். ' இப்போது அங்கிருந்து பேசுவது யார்? கவிஞனா அல்லது இங்கிருப்பவர்களால் உருவாக்கப்பட்ட அலரா?” குரல் “அந்தக் குழப்பத்தில்தான் இங்கே அமர்ந்திருக்கிறேன்”'... ஜராசந்தனும், சிசுபாலனும் ஜயத்ரதனிடம் ஆடும் ஆடலின் போது தெய்வ வடிவாக ராதாகிருஷ்ணனும் 'ஆமைத்த குஞ்சு, அருமந்த குஞ்சு' என்று சொல்லிக்கொண்டிருந்திருப்பான்... 'காலம் மூன்றும், வேதம் நான்கும், பூதங்கள் ஐந்தும், அறிநெறிகள் ஆறும், விண்ணகங்கள் ஏழும் அறிந்தவர்” என்று சொல்லி மூச்சுவிட்டு “இப்படியே நூற்றெட்டு வரை செல்கிறது. நேரமில்லை” என்றான்' - உண்மையில் அரங்குசொல்லியை வரையத் தேர்ந்தது அபாரம். இன்றைய அத்தியாயத்தின் நாயகன் அவன் தான்.

அருணாச்சலம் மகராஜன்