Friday, February 26, 2016

புராணமும் அங்கதமும்






ஜெ

வெண்முரசின் அங்கதப்பகுதிகளில் இப்போது வந்துகொண்டிருப்பதே சிறந்தது. அந்த மூலக்கதை ஒரு மொக்கையான புராணம். அதை ஏதேனும் சூதர்களால் சொல்லவைத்து நக்கலடித்துக் கடந்துபோவீர்கள் என நினைத்தேன். நுட்பமாக அதை அங்கதநாடகமாக ஆக்கிவிட்டீர்கள். அதாவது அனைவருக்குள்ளும் எழும் முக்கியமான கேள்வி சாப்பிட்டு அஜீர்ணம் வந்தவனுக்கு மேலும் உணவு எதற்கு என்பதையே நாடகத்திற்குள் சூத்ரதாரன் கேட்கிறான்

பல இடங்கள் அற்புதமானவை. எல்லாம் நானே என்று கிருஷ்ணன் சொல்லும்பொது எழும் கேள்விகள். அவன் அர்ஜுனனை தன் நிழலாக உருவாக்குவது . அர்ஜுனனாக அமைந்து சந்தேகப்படலாமே என நினைப்பது. பல வரிகள் சிரிப்புக்கு அப்பால் தத்துவமாக உள்ளன

சாரங்கன்