அன்புள்ள ஜெ சார்
வெண்முரசு வெய்யோன்
வளர்ந்துசெல்லு திசை இப்போது நன்றாகவே தெரிகிறது. கர்ணன் விஷம் மிகுந்தவனாக ஆகப்போகிறான்.
அவனுடைய வீழ்ச்சிதான் இந்த நாவல் இல்லையா? எதிர்பார்த்ததாக இருந்தாலும் இந்த வீழ்ச்சி
மனம் கசப்படையச்செய்கிறது.
ஆனால் இதுவரை வந்த
எந்த மகாபாரதக்கதையிலும் இல்லாத ஒரு வலுவான தரப்பை உருவாக்கிவிட்டீர்கள். ஏன் பாஞ்சாலியை
அவமதிக்கையில் கர்ணன் பேசாமலிருந்தான்? அதை நியாயப்படுத்தவே முடியாது. ஆனால் இப்போது
இந்த காண்டவ அழிப்புக்கு அவள்தான் காரணம் என்னும்போது அதில் தப்பே இல்லை என்று தோன்றுகிறது.
இருதரப்பையும்
வலுவானதாக ஆக்கிவிட்டீர்கள். மாட்ச் சுவாரசியமாக ஆகிறது
சரவணன்