Tuesday, February 16, 2016

இருள் முதல்முடிவற்றது



அன்புள்ள ஜெ,

நான் பல நாளக எழுத நினைத்தது இன்று தமிழ் இந்து நடு பக்கம் பார்த்த பின்பு எழுதி விடுவது என்று முடிவெடுத்து விட்டேன்.

"""இருள் முதல்முடிவற்றது. ஆதியில் அதுமட்டும்தான் இருந்தது. வானகங்கள் அனைத்தும் அந்த இருளுக்குள்தான் இருந்தன"""
இருள் என்பதை கருத்துகள் (black hole) என்று கொள்வோமயின், முதலில் கோள்களில் இருந்து black hole உருவானதா அல்லது  black hole இருந்து கோள்கள் உருவானதா என்று தெரியாது. அதனாலயே இந்த இருள் முதல்முடிவற்றது. அதற்குள்தான் அனைத்து கோள்களும் உள்ளடக்கம்.
""""அந்த இருள் ஒரு மாபெரும் நாகப்பாம்பின் வடிவிலிருந்தது. கற்பனையும் கனவும் தியானமும் எட்டமுடியாத அளவுக்கு நீளம்கொண்ட அந்த நாகம் கண்களற்றது. ஏனென்றால் அது பார்ப்பதற்கென அதுவன்றி ஏதுமிருக்கவில்லை. அது தன் வாலை வாயால் கவ்வி விழுங்கி ஒரு பெரிய வளையமாக ஆகி அங்கே கிடந்தது""""

black hole மிக மிக அடர்த்தியானது. அதை விரித்து எடுக்க முடியும் எனில் அதன் நீளம் முடியிலியை நோக்கியே செல்லும். அது மொத்தமக சுருங்கி வளையமாக அவ்வாறு இருக்கின்றது.

"""அதன்பிறகு அதன் அகத்தில் ஒரு இச்சை பிறந்தது. அந்த இச்சை இரண்டு கண்களாக அதன் முகத்தில் திறந்தது. அந்தக் கண்களில் ஒன்று எரிந்து சுடர்விடும் செந்நிறமான ஆதித்யனாகவும் இன்னொன்று வெண்ணிற ஒளிவிடும் குளிர்ந்த சந்திரனாகவும் இருந்தன. அந்த விழிகளால் அந்த நாகம் தன்னைத்தானே பார்த்துக்கொண்டது. ‘இது நான்’ என சொல்லிக்கொண்டது. ‘இருக்கிறேன்’ என்று அறிந்தது. ‘இனி?’ என்று கேட்டுக்கொண்டது. அந்தச் சொற்கள் அதனுள் அகங்காரமாக மலர்ந்தபோது அதன் தலையில் படம் விரிய ஆரம்பித்தது. பின்பு பல்லாயிரம் கோடி தலைகள் முளைத்தெழுந்து படம்விரித்தன. அவற்றில் பலகோடி கண்கள் முளைத்தன. அவையெல்லாம் ஆதித்யர்களும் சந்திரர்களுமாக ஆகி இருளெங்கும் மின்ன ஆரம்பித்தன""""
black hole மிக மிக அடர்த்தியானதன்பதால் அதனுடய கனமான ஈர்ப்பு விசையை இருளின் இச்சை எனக்கொள்ளலாம். அதற்க்கு ஈர்ப்பு விசை உருவான பிறகு அது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் உள் இழுத்து கோள்களை உருவாக்குகின்றது. அதுவே ஆதித்திய்ர்களாகவும் சந்திர்களாகவும் ஆகின்றது. அது உருவாகும் பொழுது அதை சுற்றிலும் ஈர்ப்பு அலைகள்தான் அந்த நாகம் படம் விரித்து ஆட ஆரம்பிக்கும் இடம். அது முழுவதும் கோள் ஆனப்பிறகு சூரியனாய் தழல்விட்டு எரிகின்றது.
இருள் நாகத்தை black holeக ஆக்கினால் போதும், வெண்முரசு நம்மை வெறோறு தளத்திற்க்கு கொண்டுச்செல்லும்.

இதனுடன் இன்னொறு வெண்முரசின் உவமானங்கள், உவமைக்கள் அனைத்தும் black hole தான். அதை விரித்து எடுக்க முடியும் எனில் அதன் நீளம் முடியிலியை நோக்கியே செல்லும். இந்த black holeல் இருந்து இன்னும் எவ்வளவு சூரியனும் சந்திரனும் உருவாக்க போகிறார்கள் என்று கணிக்கமுடியவில்லை.

இத்துடன் அந்த இருள் நாகத்தின் கண்களும், அது பத்தி விரித்து ஆடும் படமும் இனைக்கப்பட்டுள்ளது.
அன்புடன்,
விஜி.