Tuesday, February 23, 2016

மாற்றுப்புராணம்





ஜெ,
வெண்முரசின் நாகங்களின் கதையை இதுவரை வந்த பலவகையான வரலாறுகளுடன் இணைத்துப்பார்த்துக்கொண்டேன். எல்லா வரலாறுகளிலும் ஒரே டெம்ப்ளேட் இருக்கிறது. எது தங்கள் டோட்டமோ அதுதான் உலகத்தைப்படைத்தது என்று நம்புகிறார்கள். அவர்களுக்குள் பெரியவர் சிறியவர் என ஒரு இனப்பகுப்பு இருக்கிறது. வட்டாரம் சார்ந்த பிரிவினை காலப்போக்கில் தனித்தனிப்பண்பாடுகளாக மாறிவிடுகிறது. வலுவானவர்கள் பிறரை வெல்ல போர்செய்கிறார்கள்

நாகர்கள் இந்தியாவின் வரலாறு தொடங்குவதற்கு முன்பே இங்கே ஆண்டவர்கள், தனி வரலாறு கொண்டவர்கள் என தோன்றுகிறது. கத்ரு வினதை கதையே அவர்களுக்கென தனியான ஒரு புராணமரபு இருந்தது என்பதற்கான ஆதாரம்

அரவிந்தன்