வெண்முரசின் தெய்வங்களைப்பற்றி
ஒரு வாசகர் எழுதியிருந்தார். முக்கியமான ஒரு பார்வை அது. வெண்முரசில் தெய்வம் என்பது
மிகவிரிவான அர்த்ததில் உள்ளது என நினைக்கிறேன். தெய்வங்களைப்பற்றி பேசப்பட்டுக்கொண்டே
இருக்கிறது இதில். வெண்முரசு தெய்வம் என்றால் ஒரு ஃபினாமினன், ஒரு காஸ்மிக் இமேஜினேஷன்
என நினைக்கிறது. ஆகவே ஒவ்வொரு கருத்துக்கும் அதற்கான தெய்வம் உள்ளது. ஒவ்வொரு மனநிலைக்கும்
உணர்ச்சிக்கும் செயலுக்கும் தெய்வம் உள்ளது.
ஒரு விஷயத்தை அதன் உச்சநிலையில்
ஒரு உருவமாக காட்டுவதே தெய்வம் என்று வெண்முரசு சொல்கிறது. ஆகவே தெய்வங்கள் பிறந்துகொண்டே
இருக்கின்றன. தெய்வங்களை நான் சூப்பர் போயட்டிக் இமேஜஸ் என்றுதான் எடுத்துக்கொள்கிறேன்.
அவை பின்னர் மதம் சார்ந்த தெய்வங்களாக ஆகலாம். ஆனால் தெய்வமென்பது ஒரு peak of
idea நான் சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை. இது என் மனதில் தோன்றியது
செல்வக்குமார்