அசலையின் சீற்றத்தை
வாசித்துக்கொண்டிருந்தபோது அவளை ஒரு அன்னை ஓநாய் என்ரு எண்ணிக்கொண்டேன். அவள் குரூரமானவளாக
இருக்கிறாள்.எதிரே நிற்பவர்களை எல்லாம் கடித்துக்குதறிவிடுகிறாள். அவளுக்கு எவர்மேலும்
இரக்கமே கிடையாது. ஏனென்றால் அவள் தன் குட்டிகளைக் காப்பாற்ற நினைக்கும் அன்னை
அந்த இரக்கமற்ற
தன்மையால்தான் அவளால் மிக மிக எளிதாக சில உண்மைகளைத் தொட்டுவிடமுடிகிறது. உண்மையைச்
சென்று தொடுவதற்கு ஒருவகையான வேகம் தேவைப்படுகிறது. அந்த வேகம் இவ்வாறு குட்டிகள்மீதான
பிரியமாக விலங்குபோல வெளிப்பட்டாகவேண்டியிருக்கிரது
மகேந்திரன்