ஜெ
ஒரு வெண்முரசு நாவல் முடியும்போது முழுக்கமுழுக்க ஒரு தனி நாவல் உலகிலே வாழ்ந்து முடிந்த உணர்ச்சி உருவாகிறது. அதன்பின்னர்தான் ஒட்டுமொத்தமாக வெண்முரசைப்பற்றிய எண்ணம் ஏற்படுகிறது. ஒட்டுமொத்தமாக வெண்முரசு எதையெல்லாம் திரட்டிக்கொண்டுவந்துசேர்க்கிறது என்று பாக்கத்தோன்றுகிறது. பெரும்பாலான நாவல்களின் கடைசியில் அந்த நினைவுகூரல் இருந்துகொண்டுதான் உள்ளது. உதாரணமாக எழுதழல் முடியும்போது அது சத்யவதியை நினைவுகூர்கிறது. சத்யவதி ஒரு கதாபாத்திரமாக உலவி நான்காண்டுகளே ஆகின்றன. ஆனால் அது ஏதோ தொல்பழங்காலம் போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஒரு பெருமூச்சு வருகிறது.
ஜெயராமன்