பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
இன்றைய ''குருதிச்சாரல்' அத்தியாயத்தில் பெண்களின் இக்கட்டை வெளிப்படுத்திய இந்த வரிகள் மிக அருமை!
"மகளென்று நம் சொல் அவையேறவில்லை. மனைவியென்றும் செவிகொள்ளப்படவில்லை. அன்னையென்று ஆனபின்னராவது அதற்கு ஆற்றல் வந்தாகவேண்டும்."
மேலும் மஹாபாரதக் கதையில் நீங்கள் எவ்வளவு தூரத்திற்கு உளம் தோய்ந்து அவதானித்து எழுதுகிறீர்கள் என்பதை இந்த சித்தரிப்பு நன்கு காட்டுகிறது.
"ஓங்கிய படைக்கலம் குருதியின்றி அமையாது. நான் விழைவது என் மைந்தன் வாழும்காலம் வரை இப்போர் தவிர்க்கப்படவேண்டும் என்றே” என்றாள்.
“உண்மையில் இப்போர் தொடங்கி நீண்டகாலமாகிறது. இது சத்யவதி குறித்திட்ட போர். இருதலைமுறைக்காலம் இதை நீட்டிக்கொண்டுவந்து நிறுத்தியவர் பிதாமகர் பீஷ்மர். இன்று நாமனைவரும் முயன்றால் மீண்டும் ஒருதலைமுறைக்காலம் கடத்திச்செல்லமுடியும். தெய்வங்கள் காத்திருக்கும் ஆற்றல்மிக்கவை. ஏனென்றால் அத்தனை வேட்டைவிலங்குகளும் பொறுமையானவை. நாம் இன்று தப்புவதைப்பற்றி மட்டுமே பேசுகிறேன்” என்றாள் தேவிகை. "
அன்புடன்,
அ .சேஷகிரி