பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் வெண்முரசின் வாசகன் எழுதிக்கொள்வது..
வெண்முரசு என்ன ஆனது?
அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதா , அது பற்றி அறிவிப்பு ஏதாவது வெளியாகி நான் படிக்காமல் தவற விட்டேனா?
வேறு ஏதாவது வேலையா?
வேறு ஏதாவது காரணமா? (Ockhi cyclone போல )எந்த வகையிலாவது தமிழ் வாசகர்கள் மீது கோபமா ? இப்படி கேட்பது சிறுபிள்ளைத்தனமாக கூட இருக்கலாம் , ஆனால் ஏதாவது வாசகர் அல்லது தமிழ் வாசக பரப்பு தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்கும் பல நூறு உள்ளங்களில் நானும் நிச்சயமாக இருப்பேன்.
இந்த இமாலய முயற்சி பாதியிலேயே நிற்க கூடாது..
அன்புடன்
கோகுல்
அன்புள்ள கோகுல்
வெண்முரசு மீண்டும்
தொடங்கும். ஒவ்வொரு நாவல் முடிந்தபின்னரும் 15 நாள் இடைவெளி விடுவது வழக்கம். அது எனக்கு
ஓர் இளைப்பாறல். அடுத்தநாவலை திட்டமிட முடியும். வாசகர்களுக்கும் ஒருநாவலின் வடிவத்தை
முழுமையாக மனதில் உருவாக்கவும் அதுவரை வாசித்தவற்றை அசைபோட்டு தொகுத்துக்கொள்ளவும்
உதவும்
ஜெ