அன்புள்ள ஜெ
வெண்முரசின் நுட்பங்களில்
முக்கியமானது அன்றாடவாழ்க்கையின் நுண்மைகளை அது தொட்டுத்தொட்டுச் செல்வது என நினைக்கிறேன்.
உதாரணமாக பீஷ்மரிடம் பேசும்போது காந்தாரி அவர் இருந்த சூழல் அவருடைய மனநிலையைத் தீர்மானிக்கிறது
என்கிறாள். அவர் சோலையில் இருந்தமையால் தன்னை ஒரு முனிவராக பாவனைசெய்துகொண்டிருக்கிறார்.
அவர் மட்டும் ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தாரென்றால் வேறுமாதிரி இருந்திருப்பார்.
இதைப்போல பல விஷயங்கள் வந்தபடியே இருக்கின்றன. மையக்கதையை நாம் கவனித்தால் இந்த நுட்பங்களைத்
தவறவிட்டுவிடுவோம் என நினைக்கிறேன்
ஆனந்த்