Tuesday, December 5, 2017

சதுரங்கம்



அன்புள்ள ஜெ,

விதுரர் சதுரங்கம் ஆட ஆரம்பிப்பதும் சகுனி ஆட்டத்தை நிறுத்துவதுமாக விசித்திரமான ஒரு நாடகத்தன்மையுடன் எழுதழல் முடிந்திருக்கிறது. அதற்கு என்னதான் அர்த்தம் என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். விதுரர் அதுவரை மானசீகமாகச் சதுரங்கம் ஆடிக்கொண்டுதான் இருந்தார். இதெல்லாம் என்னால் சரியாக்கக்கூடியவை என்று எண்ணினார். அதெல்லாம் ஒன்றும் நடக்காது எனத்தெரிந்து இப்போது விதியுடன் ஆட ஆரம்பித்துவிட்டார்.

அதைவிட திருதராஷ்டிரன் இசையை விட்டுவிட்டு சதுரங்கம் ஆடுகிறார் என்பது திடுக்கிடும் முடிவு. ஆனால் அவருக்குள் நிகழ்ந்த மாற்றத்தை உணரமுடிகிறது. சகுனி அதுவரை விதி என்னதான் சொல்கிறது என்று தேடிவந்தார். விதி ஜெயிக்கப்போகிறது எனத்தெரிந்ததும் நிறுத்திவிட்டார். இப்படியெல்லாம் சொல்லமுடியாதுதான். நான் இப்படியெல்லாம் வாசித்தேன் என்றுமட்டும் சொல்லவிரும்புகிறேன்.


ஜெயக்குமார்