ஜெ,
குருதிச்சாரல்
சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது. குருஷேத்ரம்தான் இனி கதைக்களம். அதை விரிவாகவும்
நுணுக்கமாகவும் அறிமுகம்செய்திருக்கிறீர்கள். ஏற்கனவே முதற்கனலிலேயே குருஷேத்ரம்
வந்துவிட்டது. அதை மீண்டும் விவரிக்கிறீர்கள். அப்போது மகாபாரதப்போர் முடிந்து
மொத்த உடசல்களையும் சிதல்கள் தின்றுகொண்டிருக்கின்றன . இப்போது முந்தையபோர்களில்
எஞ்சியதைத் தின்றுகொண்டிருக்கின்றன. கரையான்கள்தான் காலம். குருஷேத்ரம் காலபூமி
சரவணன்