Sunday, December 24, 2017

அறம் என்பது பழிவாங்கல்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

சகதேவனின் கருத்துக்கள் கவர்கின்றன.  நீதி, அறம் என்பது பழிவாங்கல் என்பது சரிதானே? இது அச்சத்தைத் தான் 'மன்னித்தல்' கருணை' என்று குறிக்கிறோம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.  தானோ தன் தரப்பினரோ தண்டிக்கப்படும் போது அல்லது தண்டிக்கப்படும் இடத்தில் தான் இருப்பதாக எண்ணி நோக்கும் போது உண்டாகும் அச்சம் 'மன்னித்தல்' கருணை' என்று சொற்களைக் கொண்டு வருகிறது, தனக்கோ தன்னவர்க்கோ தீங்கு இழைக்கப்பட்டது எனும் போது 'மன்னித்தல்' கருணை' கருதப்படுவதில்லை  அங்கு பழிவாங்கல் 'நீதி' என்றே வெளிப்படுகிறது.

தன்னிடம் தானே நடித்து அதுவே தன் நிஜம் என்று நம்பி மற்றவர்க்கும் அதையே காட்ட, சற்றே கண் அயர்ந்தால் பற்றும் குருஷேத்ர மண் போல காண அஞ்சும் சிறுமைகள் இருளில் தம் இடத்தில் காத்திருக்கின்றன.  அக்கணத்தை ஆளும் தெய்வம் வேறு என்று கொள்ள மனம் ஒப்பவில்லை.  தானே தான் என்று பொறுப்பு ஏற்கவேண்டும் அல்லது எக்கணமும் ஆளும் பரமனிடம் தன் வறுமை சொல்லி பிச்சை எடுத்தவாறிருக்க வேண்டும் என்று கொள்வேன்.        

இளைய யாதவரின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.


அன்புடன்
விக்ரம்
கோவை